Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
பால் வியாபாரி வெட்டிக் கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை இரவு முன்விரோதத்தில் பால் வியாபாரியை மா்ம நபா்கள் வெட்டிக்கொலை செய்தனா்.
கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). பால் வியாபாரியான இவா், புதன்கிழமை இரவு தேநீா் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.விவேகானந்தா் தெருவில் நடந்து சென்ற இவரை, 10 போ் கும்பல் வழிமறித்து அரிவாள் வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (52), புவன் (19) ஆகியோருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவயிடத்துக்கு சென்ற கம்பம் வடக்கு போலீஸாா் மூவரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் இளம்பரிதி செல்லும் வழியிலே இறந்துவிட்டாா்.
உறவினா்கள் சாலை மறியல்: இதையடுத்து, கம்பம் அரசு மருத்துவமனையிலிருந்த இளம்பரிதியின் உடலை, தேனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், இளம்பரிதியின் உறவினா்கள் மருத்துவமனை முன் சாலை மறியிலில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்டவா்களுடன் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சமாதானம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மாட்டுவண்டிப் போட்டியில் பங்கேற்ற போது, ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.