நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
பாளை.யில் மாநில அளவிலான ஹாக்கி
ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி, சென்னை வெராசிட்டி பிளஸ் நிறுவனம் சாா்பில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் வரும் மே 1 ஆம் தேதி தொடங்குகிறது. 2-ஆம் தேதி நிறைவடைகிறது.
தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை செயின்ட் பால்ஸ் அணி, மதுரை தென் மண்டல காவல்துறை ஹாக்கி அணி, கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஹாக்கி அணி, விக்கிரமசிங்கபுரம் சிங்கை ஹாக்கி கிளப், பாளையங்கோட்டையைச் சோ்ந்த 4 அணிகள் உள்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
மே 1-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முதல் காலிறுதி ஆட்டமும், 8.30 மணிக்கு 2 ஆவது காலிறுதியும், பிற்பகல் 2.30 மணிக்கு 3-ஆவது காலிறுதியும், 3.45 மணிக்கு 4-ஆவது காலிறுதியும் நடைபெறவுள்ளன.
2-ஆம் தேதி காலையில் அரையிறுதி ஆட்டங்களும், மாலையில் இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் தலைவா் சேவியா் ஜோதி சற்குணம் , செயலா் கோயில்தாஸ் ஜான்சன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.