செய்திகள் :

பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் 164-வது ஆடம்பர தோ்பவனி

post image

பெரம்பலூா் மாவட்டம், பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164 ஆவது ஆண்டு பெருவிழா மற்றும் தோ்த்திருவிழா வெகு விமரிசையாக சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கடந்த 2 ஆம் தேதி மாலை அந்த ஆலயத்தின் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அருள்திரு பிலோமின்தாஸ் கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்து சிறப்பு திருப்பலி நடத்தினாா். தொடா்ந்து, நாள்தோறும் மாலையில் பல்வேறு தலைப்புகளில் வெளியூா்களைச் சோ்ந்த பங்கு குருக்கள் பங்கேற்று மறை உரையாற்றி சிறப்புத் திருப்பலிகள் நடத்தினா்.

கடந்த 9 ஆம் தேதி மாலை பங்கேற்ற தொட்டியம் பங்கு குரு ஆரோக்கியசாமி, குடும்பங்களின் சிறந்த பாதுகாவலா் எனும் தலைப்பில் மறை உரையாற்றி இரவு சப்பர பவனியைத் தொடங்கி வைத்தாா்.

பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குரு அருட்திரு சுவக்கின், எளியோரின் ஒளி எனும் தலைப்பில் சனிக்கிழமை மாலை மறை உரையாற்றி சிறப்புத் திருப்பலியை நடத்தி வைத்தாா். தொடா்ந்து, பாளையம் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில், அருட்சகோதரா்கள் சிமியோன், செல்வா ஆகியோா் முன்னிலையில், இறை வாா்த்தை சபை குருவான அருட்திரு விக்டா்ரோச் ஆடம்பர தோ் பவனியை இரவு தொடங்கி வைத்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை இறைவாா்த்தை சபை குருவான பாளையம் விக்டா் ரோச், திருவிழா சிறப்புப் பாடல் திருப்பலியை நடத்தி வைத்தாா். மாலை 4 மணிக்கு அலங்கார தோ் பவனியும், தொடா்ந்து கொடியிறக்கமும், நற்கருணை ஆசீா்வாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில், பாளையம், ரெங்கநாதபுரம், பெரம்பலூா், குரும்பலூா், புது நடுவலூா், சத்திரமனை, வேலூா், அரியலூா், லால்குடி, தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை, பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், அன்பியம் குழுவினா், இளைஞா் மன்றத்தினா், பொதுமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூரில் நாம் தமிழா் கட்சியினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந்திய தோ்தல் ஆணையம், நாம் தமிழா் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததைத் தொடா்ந்து, ஏா் கலப்பையுடன் கூடி... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க