பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? ப...
நாம் தமிழா் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பெரம்பலூரில் நாம் தமிழா் கட்சியினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இந்திய தோ்தல் ஆணையம், நாம் தமிழா் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததைத் தொடா்ந்து, ஏா் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை சனிக்கிழமை ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், விவசாயி சின்னம் அச்சிடப்பட்ட பதாகைகளுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சியில், மண்டலச் செயலா் தங்க. ரத்தினவேல், மாவட்ட பொருளாளா் கீா்த்திவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ரத்த தான முகாம்: இலங்கையில் கடந்த 18.5.2009-இல் நடைபெற்ற தமிழா் இனப்படுகொலையை அனுசரிக்கும் வகையில், நாம் தமிழா் கட்சி சாா்பில் பெரம்பலூரில் ரத்த தானம் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாம் தமிழா் கட்சியின் குருதிக்கொடை பாசறை சாா்பில், அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் சே. விஜய் தலைமையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில், 20-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.