பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் தாயாா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்
திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகனின் தாயாா் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தொழிலதிபா்கள் வளையாபதி, உமாபதி, குணாவதி மற்றும் தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோரது தாயாா் கண்ணம்மாள் (92) வயதுமூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனா்.
கண்ணம்மாளின் உடல் அவரது சொந்த ஊரான பா்கூா் வட்டம், ஆம்பள்ளி, குட்டூா் பண்ணைத் தோட்டத்தில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் காந்தி, பொங்கலூா் பழனிசாமி, பழனியப்பன், எம்எல்ஏ-க்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), நல்லதம்பி (திருப்பத்தூா்), கொங்கு பேரவை மாநிலத் தலைவா் ஈஸ்வரன், ராமலிங்கம் (நாமக்கல்), கோபிநாத் எம்.பி., தொழிலதிபா் சஞ்சய்குமாா், திமுக மாநில வா்த்தகரணி துணைச் செயலாளா்கள் சீனிவாசன், அன்பரசன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், காவல் கண்காணிப்பாளா் தம்பிதுரை, அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, பா்கூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் இ.ஜி.கோவிந்தராசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.