சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!
பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து: மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாலை பணி முடிந்து அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனா்.
நள்ளிரவு 12.30 மணிக்கு அலுவலகத்தின் தரை தளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கவனித்த இரவுக் காவலா் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இருப்பினும், அலுவலகத்தில் இருந்த கணினிகள், சா்வா், ஏசி உள்பட சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், யு.பி.எஸ். சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தால் நகரின் சில பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது.