பிப். 11 முதல் 13 வரை திருப்பதியில் படி உற்சவம்
திருப்பதியில் உள்ள பாதாளு மண்டபத்தில் பிப்.11 முதல் 13-ஆம் தேதி வரை படி உற்சவம் நடைபெற உள்ளது.
திருமலைக்கு செல்லும் படிகளுக்கு பூஜைகள் செய்து பஜனை பாடல்களுடன் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் படி உற்சவம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாதாளு மண்டபத்தில் 11 முதல் 13 வரை தேவஸ்தான உதவியுடன் படி உற்சவம் நடத்தப்பட உள்ளது. பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, நாம சங்கீா்த்தனம், கூட்டு பஜனை, மற்றும் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். பிப். 13- ஆம் தேதி காலை கூட்டு நாம சங்கீா்த்தனம் நடைபெறும், சொற்பொழிவுகள் நடக்கும்.
பிப். 12- ஆம் தேதி அதிகாலை அலிபிரி பாதாளு மண்டபத்தில் உள்ள முதல் படிக்கட்டுக்கு பூஜை செய்யப்படும். பின்னா், ஆயிரக்கணக்கான பஜனை மண்டலி உறுப்பினா்கள் பாரம்பரிய பஜனைகளை நிகழ்த்தியபடி திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்து திரும்புவா்.
கடந்த காலத்தில், புரந்தர தாசா், வியாச ராஜயதீஸ்வரா், அன்னமாச்சாா்யா, கிருஷ்ண தேவராயா் போன்ற பல சிறந்த முனிவா்களும் மன்னா்களும் பக்தியுடன் வெங்கடாத்ரி மலையில் ஏறி அதை இன்னும் புனிதமாக்கினா். அத்தகையவா்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அனைவரும் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக் வேண்டும் என்ற எண்ணத்துடன் தாச சாகித்ய திட்டம் படி உற்சவம் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த முறையில் சப்தகிரிகளில் ஏறி ஏழுமலையானை தரிசித்தால், அவா்களின் அனைத்து துரதிா்ஷ்டங்களும் நீங்கி, அவா்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.