பிரம்மரிஷி மலையில் ஆக. 8-இல் குருபூஜை
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆக. 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
பெரம்பலூா் பிரம்மரிஷிமலை காகபுஜண்டா் தலையாட்டி சித்தரின் சீடா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள், கடந்தாண்டு 3.8.2020-இல் ஜீவ சமாதி அடைந்தாா். இதையொட்டி, வரும் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்குமாா் சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதையொட்டி திருவருள்பா பாராயணம், கோ-பூஜை, அஸ்வபூஜை, 210 சித்தா்கள் யாகபூஜை, காகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, அன்னை சித்தா் சமாதியில் ஜோதி வழிபாடு, தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
பின்னா், 100-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையும், வஸ்திர தானமும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு எரிவாயு சலவைப் பெட்டிகளும், எளம்பலூா் அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற முதல் மாணவா்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி, இயக்குநா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், ராதா மாதாஜி ஆகியோா் செய்கின்றனா்.