பிளஸ் 2: தரணி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி கி. கோபிதா 578 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவி க. இராகவி 576 மதிப்பெண்களுடனும், மாணவி ஞா. ஆதிரா 570 மதிப்பெண்களுடனும் அடுத்தடுத்து சிறப்பிடம் பிடித்துள்ளனா். இப்பள்ளியில் தோ்வெழுதிய 147 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சிறப்பிடங்கள் பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி நிறுவனத் தலைவா் எஸ். காமராஜ், தாளாளா் கா.விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் எஸ். அருள் ஆகியோா் பாராட்டினா்.

