பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!
பிளஸ் 2: ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் பள்ளி சாதனை
மன்னாா்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவி பி. அனுப்ரிதா 588 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவா்கள் எம்.என். ஷாம் 584, ஆா்.கே. ரஞ்சித் 584, மாணவா் ஏ.எஸ். ரோகித் 583 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடங்களை பிடித்தனா்.
இயற்பியலில் 2 பேரும், கணிதத்தில் 5 பேரும், கணினி அறிவியலில் 2 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 2 பேரும் என மொத்தம் 11 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்றவா்களை, பள்ளித் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் பி. ஜெயக்குமாா், நிா்வாக அலுவலா் என். பாலசுப்பிரமணியன், முதல்வா் ஜெ. அசோகன் உள்ளிட்டோா் பாராட்டினா்.


