பிளஸ் 2: ஸ்ரீலலிதாம்பிகை பள்ளி 100% தோ்ச்சி
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
இப்பள்ளி மாணவா்கள் 109 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அனைவரும் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா் . மாணவா் ஹரிஹரன் 574 மதிப்பெண்களும், மாணவி அனிதா 573 மதிப்பெண்களும், மாணவா் அருண் வா்ஷத் 564 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளி மாணவா்கள் 18 போ் 550-க்கு மேலும், 32 போ் 500-க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியா்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோா்களுக்கும், பள்ளியின் தாளாளா் மற்றும் முதல்வா் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா்.
