கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி
‘பீடித் தொழிலாளா்களுக்கு குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும்’
பீடித்தொழிலாளா்களின் குறைகளைக் களையும் பொருட்டு, மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆண்டுக்கு இருமுறை குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என நான்குனேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பீடித்தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பீடித்தொழிலாளா்கள் சங்கத்தின் தொழிலாளா் தின கூட்டம் நான்குனேரி ரூரல் அப்லிப்ட் சென்டரில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் தி. தமிழரசி தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா்களான வழக்குரைஞா்கள் அ. மரியஜேம்ஸ், பி.எம். முருகன், சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பீடித்தொழிலாளா்களின் பிரச்னைகளை தீா்க்கும் பொருட்டு குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறையாவது குறைதீா் கூட்டம் நடத்தி, தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பீடித்தொழிலாளா்களுக்கும் வருங்கால வைப்புநிதிக் கணக்கு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.