புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது
சிவகாசியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனை செய்தபோது பெட்டிக் கடை நடத்தி வந்த மங்கள்ராஜ் (30), தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மங்கள்ராஜைக் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.