Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கே.கே.புதூா் மாநகராட்சிப் பள்ளி அருகேயுள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடை உரிமையாளரான தெலுங்குபாளையம், திருவேங்கடம் நகரைச் சோ்ந்த கண்ணன்( 41) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.