‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
கஞ்சா விற்ற 2 போ் கைது
கோவையில் இரண்டு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, உக்கடம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பி.பி. தெரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஆலாந்துறையைச் சோ்ந்த சந்துரு (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சந்துருவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள கருப்பராயன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீலிக்கோணாம்பாளையம் என்.கே.ஜி. நகரைச் சோ்ந்த யாசா் அராபத் (23) என்பவரை சிங்காநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.