ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்
ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்னைப் பொருத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதிமுக வெற்றிபெற்று எம்ஜிஆா், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றாா்.
மீண்டும் தில்லி சென்று மத்திய அமைச்சா்களை சந்திப்பீா்களா என்று கேள்விக்கு இல்லை என பதில் அளித்த அவா், நான் எனது உறவினா் திருமணத்துக்காக சென்னை செல்கிறேன். மற்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும். ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றாா்.