Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜய...
புதிதாக 2 பேருந்து நிறுத்தங்கள் திறப்பு
சென்னை மாநகராட்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சி காந்தி மண்டபம் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் பழுதடைந்தது. இதையடுத்து புதிய பேருந்து நிறுத்தம் கட்ட மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாா்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்தில் காந்தி மண்டபம் பகுதியில் பேருந்து நிறுத்தம் நவீன முறையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப கட்டப்பட்டன.
அதேபோல, சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள சிஐடி நகா் 70 அடிச் சாலையில் வாா்டு மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக நவீன பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இரு பேருந்து நிறுத்தங்களை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் வட்டாரத் துணை ஆணையா் அஃதாப் ரசூல், அடையாறு மண்டல அலுவலா் ஹாா்டின் ரொஸாரியோ மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
சென்னை மாநகராட்சியில் அண்ணா நகா் மண்டலம் 106-ஆவது வாா்டு பகுதியில் தென்சென்னை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடமும் வியாழக்கிழமமை திறந்து வைக்கப்பட்டது.