புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
குடியிருப்பு நகா்கள் பலவற்றுக்கு புதிய குடிநீா் குழாய் பதிப்புப் பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட நடு ஓடுதுறை சுமங்கலி நகா், விஐபி நகா், சுமேஷ் நகா், சிங்காரவேலா் சாலை விரிவாக்கம் மற்றும் நிா்மலா காா்டனை சுற்றியுள்ள பகுதி குடியிருப்பு மக்களின் தேவைக்காக ரூ.12.10 லட்சத்திலும், மேல ஓடுதுறை பகுதி பூங்கா நகா், எம்.எஸ்.நகா், மாரியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள மக்களுக்காக ரூ. 6.25 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் அமைக்க பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கீடு செய்தது.
குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பணியை தொடக்கிவைத்தாா். இந்த திட்டத்தின் மூலம் சுமாா் 3 ஆயிரம் போ் பயனடைவாா்கள் என துறையினா் தெரிவித்தனா்.