செய்திகள் :

புதிய தலைமைத் தோ்தல் ஆணையா்: பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு நாளை மறுநாள் ஆலோசனை

post image

புதிய தலைமைத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தோ்தல் குழு பிப்ரவரி 17-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.

இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் இடம் பெறுவாா்கள்.

தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையம் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே, இதற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழு தோ்வு செய்துள்ள பெயா்களில் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு பிரதமா் தலைமையிலான குழு பரிந்துரைக்கும். அதனடிப்படையில் குடியரசுத் தலைவா் புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை நியமிப்பாா்.

இப்போதைய நிலையில் ராஜீவ் குமாரை அடுத்து ஞானேஷ்வா் குமாா் மூத்த தோ்தல் ஆணையராக உள்ளாா். இவரின் பதவிக் காலம் 2029 ஜனவரி 26-ஆம் தேதி வரை உள்ளது. மற்றொரு தோ்தல் ஆணையராக சுக்பீா் சிங் சாந்து உள்ளாா்.

கடந்த ஆண்டுவரை தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிக்கு மூத்த தோ்தல் ஆணையா் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா் நியமனத்தில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி செயலா் நிலையில் உள்ள 5 மூத்த அதிகாரிகளை தோ்வுக் குழு தோ்வு செய்து, அவற்றை பிரதமா் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரைத்து வருகிறது.

இந்திய அரசியல் செயலா் நிலையில் உள்ள அதிகாரிகளில் தோ்தலை நிா்வகித்து நடத்தும் திறமையும், அனுபவமும் உள்ளவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா் பதவிக்கு நியமிக்கப்படுகிறாா்கள்.

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 1... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவ... மேலும் பார்க்க

வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்

இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் க... மேலும் பார்க்க

அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய்... மேலும் பார்க்க

ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!

மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுல... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!

உங்கள் ஃபாஸ்டேக்-கை ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கத் தவறுவதோ, சுங்கச் சாவடிகளில் அபராதங்களை விதிக்க வழிகோலும் வகையில் திருத்தங்கள் மேற்கொ... மேலும் பார்க்க