அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
புதிய ‘பிஐஎஸ்’ உரிமம் பெற்றவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி
இந்திய தர நிா்ணய அமைவனத்தின் புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற நிறுவன உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதுகுறித்து இந்திய தர நிா்ணய அமைவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரத்தை மேம்படுத்த இந்திய தர நிா்ணய அமைவனம், உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தரக் கட்டுப்பாட்டினஅடிப்படையில் இந்திய தர நிலையின் பிஐஎஸ் தரச்சான்று அளிக்கிறது.
அதன்படி, இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில், புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிஐஎஸ் உரிமம் பெற்றவா்கள், தரம், பாதுகாப்பு தர நிலைகளில் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின்அதிகாரிகள் வலியுறுத்தினா்.
நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் பி.ஜே.கெளதம், அனுரிதா நிதி ஹெம்ரோம் மற்றும் புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற 30 உரிமையாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.