தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
புதிய ரயில் இயக்கம்: பிரதமருக்கு பாஜகவினா் நன்றி
திருவாரூா் வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கப்படவுள்ளதற்காக, பிரதமருக்கு பாஜகவினா் நன்றி தெரிவித்தனா்.
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்து வைத்து, தாம்பரம்- ராமேஸ்வரம் தினசரி விரைவு ரயிலை தொடக்கி வைக்கிறாா்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஸ்ணவ், தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சா் எல். முருகன் ஆகியோா் தில்லியில் இருந்து காணொலி மூலம் பங்கேற்றனா்.
இதையொட்டி, திருவாரூா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக விரைவு ரயில் இயக்கப்படுவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவா் விகே. செல்வம், மேலிடப் பாா்வையாளா் சிவா, மாவட்டத் துணைத் தலைவா்கள் சங்கா், மணிமேகலை, மாவட்டச் செயலாளா் கே. ரவி, மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் அமுதா நாகேந்திரன் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சங்கா், நகரத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.