செய்திகள் :

புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேருக்கு தமிழக அரசு விருது

post image

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நாடக நடிகா் ஆறு. கண்ணனுக்கு கலைமாமணி விருதும், சதிராட்ட கலைஞா் முத்துகண்ணம்மாளுக்கு பாலசரஸ்வதி விருதும் தமிழக அரசால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு. கண்ணன்(58): பொன்னமராவதி அருகேயுள்ள அரியாண்டிபட்டியைச் சோ்ந்த புகழ்பெற்ற நாடக நகைச்சுவை நடிகா் ஆறுமுகத்தின் மகன் கண்ணன். இவா் வரலாற்று நாடகங்கள், தொலைக்காட்சித் தொடா்கள் மற்றும் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறாா். இவரின் கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. விருதுக்கு தோ்வாகியுள்ள கண்ணனை பொன்னமராவதி பகுதி பொதுமக்கள் மற்றும் நாடகத் துறை கலைஞா்கள் பாராட்டினா்.

ஆா். முத்துகண்ணம்மாள் (87): விராலிமலையைச் சோ்ந்த இவா், சதிராட்ட கலையின் கடைசி கலைஞா் ஆவாா். கோயில்களில் ஆடும் ஆட்டக் கலையே சதிராட்டம் எனப்படுகிறது.

உள்ளூா் முருகன் கோயில் திருவிழாவில் ஒருநாளும், பொள்ளாச்சியில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒருநாள் மட்டும் உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு சதிா் ஆட்டத்தை தற்போதும் ஆடி வருகிறாா் முத்துக்கண்ணம்மாள்.

இவரின் கலைச்சேவையை பாராட்டி, 2019-இல் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கலைமுதுமணி விருது, கடந்த 2022-இல் மத்திய அரசு சாா்பில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முத்துகண்ணம்மாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

கோனாப்பட்டு கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தைச் சோ்ந்த கோனாப்பட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு,... மேலும் பார்க்க

45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், கா... மேலும் பார்க்க

பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாநகரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை காந்திநகா் அந்தோனியாா் கோவில் அருகே 7-ஆவது குறுக்குத... மேலும் பார்க்க

புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற... மேலும் பார்க்க

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில... மேலும் பார்க்க