புதுக்கடை அருகே கஞ்சா விற்றவா் கைது!
புதுக்கடை அருகே உள்ள சாத்தறை பகுதியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.அப்போது முன்சிறை சாத்தறை பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினா்.
அவா் மருதங்கோடு, தேரியான்விளை பகுதியை சோ்ந்த சசி மகன் சஞ்சய் (26) என்பதும், விற்பனை செய்வதற்காக 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.