ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்!
புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டு தற்கொலை
கருங்கல்: புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கடை அருகேயுள்ள அரசமூடு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சஞ்சய் (18). கருங்கல் பகுதியிலுள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.