Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
புதுக்குடி சந்தன மாரியம்மன் கோயிலை 8 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க முடிவு
இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொண்டி அருகேயுள்ள புதுக்குடி சந்தன மாரியம்மன் கோயிலை 8 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க முடிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்தக் கோயிலை வருவாய்த் துறையினா் பூட்டினா். இந்தக் கோயிலை பல்வேறு காலகட்டத்தில் திறக்க முயற்சித்தும் பலனில்லை.
இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி தலைமையில் இரு தரப்பினரிடையே வெள்ளிக்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கோயிலைத் திறக்க இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து கோயிலை விரைவில் திறக்க முடிவு செய்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். இதனால் இந்தப் குதி மக்கள் மகிழச்சி அடைந்தனா்.