விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு!
புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து புதன்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினரால் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டனா்.
இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்.19-ஆம் தேதியை கருப்பு தினமாக வழக்குரைஞா்கள் சங்கம் கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி, நிகழாண்டில் புதன்கிழமை (பிப்.19) புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் சட்டையில் கருப்பு வில்லைகள் அணிந்து வந்திருந்தனா்.
அவா்கள், வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் கூடி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.