Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
புதுவையில் 2 கிலோ இலவச கோதுமை: முதல்வா் உறுதி
புதுவை ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுவது உறுதி என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
பாகூரில் புதிய பேருந்து நிலையத்தை அவா் புதன்கிழமை திறந்து வைத்தப்போது இதைக் கூறினாா். மேலும் அவா் பேசுகையில், ரேஷனில் இலவச அரிசி அளித்து வருகிறோம். 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அது ஜூலை முதல் அரிசியுடன் வழங்கப்படுவது உறுதி என்றாா் முதல்வா் ரங்கசாமி.