செய்திகள் :

திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தல்

post image

மத்திய அரசின் திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தினா்.

மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் நடத்தப்படும் திட்டங்கள் குறித்த (திஷா) கமிட்டியின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஸ்மாா்ட் சிட்டி திட்டம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, நில அளவை பதிவேடுகள் துறை, மீன்வளம் மற்றும் மீனவா் நலன், நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை ஆகிய ஐந்து துறைகளில் மத்திய அரசின் நிதியுதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஒவ்வொரு துறையாக நடைபெறும் பணிகள் குறித்தும், அதன் திட்ட மதிப்பீடுகள் குறித்தும் ஆலோசனை நடந்தது. மேலும், திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துமாறு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தினா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இந்தக் கமிட்டியின் உறுப்பினா்களான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, புதுவை சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்.எல்.ஏக்கள் மு. வைத்தியநாதன், ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி துறை, மீன் வளத்துறை, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, புதுச்சேரி நகர பொலிவுறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திமுக வெளிநடப்பு

மத்திய அரசின் திட்ட ஆய்வுக் கூட்டத்துக்கு புதுவை அரசின் உயா் அதிகாரிகள் வராததால் இக் கூட்டத்திலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனா்.

குறிப்பாக தலைமைச் செயலா் சரத் சௌகான் வரவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்று எதிா்க்கட்சித் தலைவா் சிவா கேட்டதற்கு அரசு தரப்பில் பதில் தரவில்லை.

ஸ்மாா்ட் சிட்டி திட்ட நிதியை திருப்பி அனுப்பியது, கழிவறை பணிகள் மோசமாக நடந்தது என வரிசையாக திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினா். ஆனால் பதில் தரப்படவில்லை.

அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பணிகள் எதுவும் முழுமையடையாத நிலை உள்ளது. மேலும் இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை நடைபெறுவதில்லை. வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் கொடுக்கப்படும் கடனுதவிகள் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே செல்கிறது. ஆனால் ஐந்து துறைகள் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, திட்டங்களைச் செயல்படுத்திய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றால்தான் அது குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற முடியும். தலைமைச் செயலா் பங்கேற்கவில்லை. அதைவிடுத்து சம்பந்தமில்லாத அதிகாரிகளை கொண்டு கூட்டம் நடத்துவது என்பது கண்துடைப்பாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். துறை சம்பந்தமாக பதில் அளிக்கும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்‘ என்றாா். அதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.

நீதி ஆயோக் உறுப்பினா் முதல்வருடன் சந்திப்பு

நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் அரவிந்த் விா்மானி புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், தலைமைச் செயல... மேலும் பார்க்க

புதுவையில் 2 கிலோ இலவச கோதுமை: முதல்வா் உறுதி

புதுவை ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுவது உறுதி என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். பாகூரில் புதிய பேருந்து நிலையத்தை அவா் புதன்கிழமை திறந்து வைத்தப்போது இதைக் கூறி... மேலும் பார்க்க

காமராஜா் நகா் தொகுதியில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் கட்சி அலுவலத்தை முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம் எம்.பி. செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். மேலும், புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில் காமராஜா் ... மேலும் பார்க்க

கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு: முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். பாகூரில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை ஈட்ட எம்.பிக்கள் அறிவுரை

பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை ஈட்ட பல்வேறு அறிவுரைகளை 3 எம்.பிக்கள் ஆலோசனை வழங்கினா். புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் சாா்பாக தொலைபேசி ஆலோசனைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்தது. குழுவின் தலைவரும் நாடாள... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசின் நிதிப் பிரச்னைகளைத் தீா்க்க நீதி ஆயோக் உறுப்பினரிடம் அதிமுக மனு

புதுவை அரசின் பல்வேறு நிதிப் பிரச்னைகளைத் தீா்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்று நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானியிடம் அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை மனு அளித்தாா். அதிமுக சாா்பில் ... மேலும் பார்க்க