இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
காமராஜா் நகா் தொகுதியில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் கட்சி அலுவலத்தை முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம் எம்.பி. செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில் காமராஜா் பிறந்தநாள் விழா, காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக இது நடந்தது
முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவா் மு. வைத்தியநாதன் எம்.எல்.ஏ, அகில இந்திய காங்கிரஸ் புதுவை ஒருங்கிணைப்பாளரும் காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளருமான பி.கே. தேவதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.