செய்திகள் :

புத்தாண்டு: சென்னையில் பட்டாசு வெடிக்கத் தடை; 19,000 போலீசார் பாதுகாப்பு

post image

புத்தாண்டையொட்டி சென்னையில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் புத்தாண்டையொட்டி அனைத்து இடங்களிலும் 19,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,

சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பைக் ரேஸைத் தடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

சென்னை கடற்கரைகளில் மணல் ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் புத்தாண்டையொட்டி அனைத்து இடங்களிலும் 19,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நாளை இரவு 9 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மலர்க் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு!

சென்னை மலர்க் கண்காட்சியைக் காண்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் நான்காவது மலர் காட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜன. 2) தொடக்கி வைத்தார... மேலும் பார்க்க

அசாமில் யானைகளின் எண்ணிக்கை 5,828 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2024 ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 5,828 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில... மேலும் பார்க்க

சிறையில் செல்போனுடன் பிடிப்பட்ட விசாரணைக் கைதி!

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே சிறையில் செல்போனை பதுக்கி வைத்திருந்த விசாரணைக் கைதி ஒருவர் பிடிப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தானேவிலுள்ள மத்திய சிறையில் சுமார் 200 கைதிகள் அடைக்க... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம்!

2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்(CMRL) தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது: துரை வைகோ எம்.பி.

திருச்சி : பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார். திருச்ச... மேலும் பார்க்க

நியூயார்க்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கேளிக்கை விடுதியின் வாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலுள்ள அமசுரா எனும் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன... மேலும் பார்க்க