வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
நியூயார்க்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கேளிக்கை விடுதியின் வாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலுள்ள அமசுரா எனும் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று இயங்கி வருகின்றது. சுமார் 4,000 பேர் வரை இடம்பெறக்கூடிய அந்த கேளிக்கை விடுதியில் இரவு நேர டிஜே பார்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில்,நேற்று (ஜன.1) இரவு மறைந்த முன்னாள் கூட்டளியின் நினைவாக ஆயுதம் ஏந்திய கும்பலைச் சார்ந்தவர்கள் அந்த கேளிக்கை விடுதியில் பார்ட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தியுள்ளனர்.
அப்போது இரவு 11.20 மணியளவில் கேளிக்கை விடுதியினுள் செல்வதற்காக காத்திருந்த 80க்கும் மேற்பட்டோரின் மீது அந்த கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.
இதையும் படிக்க: அமெரிக்க கார் தாக்குதலில் ஈடுபட்டவர் முன்னாள் ராணுவ வீரர்!
இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து நியூயார்க் நகர காவல்துறை தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் கொடுக்கப்படாத நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட விடியோக்களில் அந்த கேளிக்கை விடுதியின் வாசலில் காவல்துறை வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் நிற்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று (ஜன.1) நியூ ஒரிலன்ஸ் மாகாணத்தில் முன்னாள் ராணுவ வீரர் நடத்திய கார் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.