செய்திகள் :

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது: துரை வைகோ எம்.பி.

post image

திருச்சி : பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் அவர் பேசியது:

தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 அரசுப் பள்ளிகளில் இருக்கும் அடிப்படை, கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.

மத்திய அரசிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால் மத்திய அமைச்சர் தேசிய கல்விக்கொள்கையை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள் என கேட்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று கூறினோம். ஆனால் மூன்றாவது மொழியாக ஹிந்தி, சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என சொல்வது ஏன் என்றார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் என தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97 சதவிகிதம் முடிந்துள்ளது. இன்னும் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்றார்.

புத்தாண்டு ஜோக்

பொங்கள் சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, செல்லூர் ராஜூ கூறியது ஆங்கில புத்தாண்டு ஜோக் ஆகும். அதுகுறித்து பேச தேவையில்லை என்றார்.

இதையும் படிக்க |முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம்

பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பாஜக, பாஜக தலைவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகயளவில் நடந்து வருகிறது. அதேபோன்று தலைநகர் தில்லி சட்ட-ஒழுங்கு பாஜக கையில் உள்ள நிலையில், அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. 2024 இல் மட்டும் தில்லியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரிலே மக்களுக்கு பாதுகாப்பில்லை என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு, இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கையை தீவிர படுத்த வேண்டும்.

மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவரை 5 மணி நேரத்தில் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு என்றார்.

மேலும் மாணவி பாலியல் புகாரில் திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை எழுப்பி வருகிறார் இது முற்றிலும் தவறானது என துரை வைகோ கூறினார்.

மியான்மரில் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

மியான்மரில் சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜன.4) தெரிவித்துள்ளனர்.கிழக்கு மியான்மரின் ஷன் மாநிலத்தில் போதைப் பொருள் த... மேலும் பார்க்க

பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஹென்ரிக்கோ டாக்டர்ஸ் மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் அந்த மருத்த... மேலும் பார்க்க

ஈக்வடார் நாட்டில் அவசரநிலை பிரகடனம்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு மோதல்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவமும... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் சுட்டுக்கொலை!

பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.பிகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய கொள்ளைப் போன்ற... மேலும் பார்க்க

முக சீரமைப்பு சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமிக்கு வீடு: முதல்வர் வழங்கினார்

சென்னை: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் வெடிவிபத்து! ஒருவர் பலி!

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் ஒருவர் பலியாகியுள்ளார். அம்மாநிலத்தின் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு... மேலும் பார்க்க