செய்திகள் :

பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: இந்திய கொடியை பாகிஸ்தான் புறக்கணித்ததா?

நல்ல வாய்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வங்கதேசம் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே வலுவாக உள்ளது. ஆனால், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக பும்ரா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறோம்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!

இந்திய அணியில் அவர் இல்லாதது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வங்கதேசத்துக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. முகமது ஷமி அணியில் இணைந்துள்ளது மிகப் பெரிய விஷயம். அவர் உடல் தகுதியில் சற்று தடுமாறினாலும், முழு உடல் தகுதியுடன் பந்துவீசினால் வங்கதேசத்துக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்றார்.

10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவது... மேலும் பார்க்க

இளம் வீரர்களுடன் ஸ்மித் தலைமையில் ஆஸி. அணி..! பந்துவீச்சு தேர்வு!

சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இளம் ஆஸி. அணி களமிறங்குகிறது. இதற்கு முன்பு விளையாடி... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க வீரரின் பேட்டிங்கில் மயங்கிய அஸ்வின்..!

தென்னாப்பிரிக்க வீரர் ரயான் ரிக்கெல்டனை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் தமிழக வீரர் ஆர் அஸ்வின். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை... மேலும் பார்க்க

ஒரேமாதிரி ஆட்டமிழக்கும் விராட் கோலி..! விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

விராட் கோலி ஆட்டமிழக்கும் விதம் ஒரே மாதிரியாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 36 வயதாகும் விராட் கோலி பிஜிடி தொடரிலிருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிற... மேலும் பார்க்க

டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது. மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் ப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க