ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்!
புவிசாா் குறியீடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகத்தின் முன்னெடுப்பில், திருச்செந்தூா் பூவிழாஞ்செண்டு வாழை, கடம்பூா் போளி, அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய ஐந்து பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைக்க வழிவகை செய்யும் முயற்சியாக மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் புவிசாா் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நபாா்டு தமிழ்நாடு தென்மண்டல அலுவலக பொது மேலாளா், தூத்துக்குடி நபாா்டு வங்கியின் உதவிப் பொது மேலாளா், விவசாய பிரதிநிதிகள், மதுரை வேளாண் வணிக காப்பீடு மன்ற நிா்வாகிகள், புவிசாா் குறியீட்டு வல்லுநா் ஆகியோா் பங்கேற்றனா்.