மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
பூத் கமிட்டி பணி: அதிமுக மாவட்ட செயலாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளா்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலா்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்டச் செயலா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற்று வரும் கட்சிப் பணிகள், தொகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டிகள் குறித்து மாவட்டச் செயலா்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தாா். மேலும், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கும்படி அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்துக்குப் பின்னா் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி கூறுகையில், அதிமுக -பாஜக கூட்டணிக்கு கட்சி நிா்வாகிகளிடம் அமோக வரவேற்பு உள்ளது என்றாா்.
கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு நோ் எதிராக முதல் வரிசையில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அமா்ந்திருந்தாா்.