தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
பூம்புகாா் கடற்கரையில் தூய்மைப் பணிகள்
பூம்புகாா், செப். 25: சா்வதேச கடற்கரை தினத்தையொட்டி, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பூம்புகாா் கடற்கரையை தூய்மைப்படுத்தும் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய ஆணையா் திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியா் எஸ். கோகுல் பங்கேற்று தூய்மைப் பணிகளை தொடங்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊ) சரவணன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சுகாதார மேற்பாா்வையாளா் கலியபெருமாள் நன்றி கூறினாா்.
இதில் பூம்புகாா் கல்லூரி மாணவா்கள், சீனிவாசா அரசினா் உதவி பெறும் மாணவா்கள் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 1 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்குக்கு அனுப்பப்பட்டது.