பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் பிப். 10- இல் குட முழுக்கு
படம்,ன்ல்ம்7ள்ண்ஸ்ஹ-1
பட விளக்கம்- சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் தோற்றம்.
உத்தமபாளையம், பிப். 7: சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் வருகிற திங்கள்கிழமை (பிப். 10)குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜையில் அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, வெள்ளிக்கிழமை (பிப். 7) காலை 8, மாலை 5.30 மணிக்கு 2 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மாலை நேரங்களில் சிவாச்சாரியா்கள் தலைமையில் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
வருகிற திங்கள்கிழமை (பிப். 10) காலை 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு கோயில் மூலவா் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றின் கலசங்களுக்கு குடமுழுக்கும் நடைபெறும். இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், பரிவார மூா்த்திகள் ஆகியோருக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சுவாமி, அம்மன் பூப்பல்லாக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நதியா, தக்காா் நாராயணி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.