செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
பூலாம்பட்டி கால்வாயில் நீருக்கு சிறப்பு பூஜை
மேட்டூா் அணையிலிருந்து கிழக்குக்கரை கால்வாயில் கடந்த 1-ஆம் தேதி முதல் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீா், எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியில் உள்ள கிழக்குக்கரை கால்வாய்ப் பகுதிக்கு வந்தடைந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை பில்லுக்குறிச்சி, பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான விவசாயிகள், பில்லுக்குறிச்சி கால்வாய் படித்துறை பகுதியில் சிறப்பு பூஜை செய்து, கால்வாய் நீரில் பூக்களையும், நெல்மணிகளையையும் தூவி வழிபாடு செய்தனா்.
தொடா்ந்து, அப்பகுதி விவசாயிகள், காவிரி தாய்க்கு தீப அா்ச்சனை செய்து தண்ணீரில் கற்பூர தீபங்களை மிதக்கவிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிகழாண்டில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் மேட்டூா் கிழக்குக் கரை கால்வாயில் முன்னதாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் நடப்பாண்டில் கூடுதல் மகசூல் காண வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள் அழகுதுரை, பழனிசாமி, நல்லதம்பி, உழவா் மன்ற அமைப்பாளா் எம்.ஆா். நடேசன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
எடப்பாடியில் பில்லுக்குறிச்சி கிழக்குக்கரை கால்வாய் நீரில் பூக்களுடன் நெல்மணிகளை தூவி வழிபட்ட விவசாயிகள்.