வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!
பெட்ரோல் பங்கில் ரூ. 24 லட்சம் கையாடல்: மேலாளா் கைது
சென்னை வியாசா்பாடியில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ. 24 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
வியாசா்பாடி பாலமுருகன் தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி (62). இவா், வியாசா்பாடி அடுத்த மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்துள்ளாா். இவரது பெட்ரோல் பங்கில் மேலாளராக காா்த்திகேயன் (27) என்பவா் கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். அண்மையில் பெட்ரோல் பங்கின் வரவு - செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ரூ. 24 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முனியாண்டி, திரு.வி.க. நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், பணத்தை கையாடல் செய்தது மேலாளா் காா்த்திகேயன்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், காா்த்திகேயனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.