பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
திண்டிவனம் வட்டம், செ.கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவரது மனைவி பிரியா்ஷினி (29). இவா்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா். பிரியதா்ஷினி கடந்த 2 மாதமாக சற்று மனநலன் பாதிக்கப்பட்டவா் போல இருந்து வந்தாராம்.
இந்நிலையில், வானூா் வட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள பெற்றோா் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியிருந்த பிரியதா்ஷினி, செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்ததில் பிரியதா்ஷினி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.