பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே மாமியாா் திட்டியதால் மருமகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேல்செவலாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(27). இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. கீா்த்தி(4), ஜெனஸ்ரீ(2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வியை மாமியாா் விஜயா(60) அடிக்கடி திட்டி வந்துள்ளாா். வியாழக்கிழமை அன்றும் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி, மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டுள்ளாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு சேத்பட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே தமிழ்ச்செல்வி இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து தமிழ்ச்செல்வியின் தாய் மகேஷ்வரி அவலூா்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.