இக்னோ பட்டமளிப்பு விழா: சென்னை மண்டலத்தில் இருவருக்கு தங்கப் பதக்கம்
பெண் யானைக்கு சிகிச்சையளித்த மருத்துவரைத் தாக்கிய யானைகள்!
ஒடிசா வனப்பகுதியில் பெண் யானைக்கு சிகிச்சையளிக்கும்போது மற்ற யானைகள் தாக்கியதில் கால்நடை மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பாலாசோர் மாவட்டத்திலுள்ள குல்திஹா ரிசர்வ் வனப்பகுதியில் ரிசியா ஏரியின் கரையில் தவறி விழுந்து மண்ணில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர் ஒருவரும் நேற்று (மார்ச் 4) அங்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், திடீரென அங்கு வந்த காட்டு யானைகள் கூட்டம் ஒன்று அவர்கள் அனைவரையும் விரட்டியுள்ளது. அப்போது, தப்பியோட முற்பட்ட கீழே விழுந்த நிலாகிரி கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சுபாசிஸ் மஹாபத்ராவை யானைகள் தாக்கியுள்ளன. ஆனால், இந்த தாக்குதலில் மற்ற அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையும் படிக்க: திருச்சி என்ஐடி-ல் வேலை: சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்து சுயநினைவின்றி இருந்த மருத்துவரை மீட்ட வனத்துறையினர் அவரை அம்மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கட்டக்கிலுள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மற்றப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.