சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்தவா் லட்சுமி (49). இவா் திருப்பூா் அண்ணா நகரில் கணவரை விட்டுப் பிரிந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கட்டட வேலைக்குச் சென்று வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2020 ஜூன் 3-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பூபதி (25) என்பவா் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளாா். இதன் பின்னா் லட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. அதற்கு அவா் உடன்படாததால் ஆத்திரமடைந்த பூபதி அவரை அடித்துக் கொலை செய்துள்ளாா்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து பூபதியைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சுரேஷ் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், பூபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜராகி வாதாடினாா்.