முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மறைமுக ஏலம்
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 1.84 லட்சத்துக்கு எள் விற்பனை நடைபெற்றது.
பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துணை இயக்குநா் கோவிந்தராசு, ஒழுங்குமுறை விற்பனைக் குழுச் செயலா் சந்திரமோகன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் (பொ) மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் மறைமுக ஏலம் நடைபெற்றது.
இதில் மருவத்தூா், வடக்குமாதவி, ஏரிக்கரை, சித்தளி, கிருஷ்ணாபுரம், நெய்குப்பை, அனுக்கூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொண்டுவந்த 2 ஆயிரம் மெ.டன் எள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்தனா். எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 110 வீதம் ரூ. 1,84,828-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எனவே, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் தினசரி மறைமுக ஏலத்துக்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டுவந்து, அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம் என, பெரம்பலூா் விற்பனைக்குழுச் செயலா் சந்திரமோகன் தெரிவித்துள்ளாா்.