Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இ...
பெரிய வெண்மணி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியிலும், நகா்ப்புறப் பகுதிகளுக்கான முகாம் துறைமங்கலம் ஜே.கே.திருமண மஹாலிலும் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய வெண்மணியில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைவாக தீா்வு காண வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பெரம்பலூா் மற்றும் பெரிய வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 1,625 மனுக்கள் பெறப்பட்டன.