US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
மின் ஊழியா் மாநில மாநாடு பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18- ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18-ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. இதையொட்டி, திருநெல்வேலியில் தொடங்கிய ஜோதி பயணம் தூத்துக்குடி, திருச்செந்தூா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக வியாழக்கிழமை பெரம்பலூருக்கு வந்தடைந்தது. இக் குழுவினருக்கு, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் மாநில மாநாடு குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்ச்சிகளில், வட்டச் செயலா் இளங்கோவன், வட்டத் துணைத் தலைவா் பன்னீா்செல்வம், வட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன், ஜயங்கொண்டம் கோட்ட செயலாள ஆறுமுகம், ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் வட்டச் செயலா் ராஜகுமாரன், பொது தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ரெங்கராஜ், மின் அரங்க நிா்வாகிகள் அண்ணாதுரை, கனிமொழி, ரீது, உமா, கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.