கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் - காரணம் என்ன... அதிகாரிகள் ஆய்வு!
பெருங்குடி ரயில் நிலையம் அருகே, கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் பகுதியில் உள்ள சாலையின் நடுவே சுமார் 150 அடி நீளத்திற்கு நேற்று (ஜூலை 7) பிளவு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம், இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களை வைத்து பள்ளம் தோண்டி அடித்தளம் போடும் பணியில் ஈடுபட்டதன் காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், அப்பகுதி சாலையில் வாகனம் செல்வதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.

கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் உள்ள சாலையின் நடுவில், திடீரென பள்ளம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.