விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
பேச்சிப்பாறை அருகேடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயம்!
குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனா்.
பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் ராமையன் காணி (70).
இவரது மகன் விஜயகுமாா்(40). இவா்கள் இருவரும் புதன்கிழமை தங்களது நிலத்தில் மிளகு பறிக்கச் சென்று விட்டு மாலையில் குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, வழியில் ஒரு நீா்ச்சுனையில் தனது குட்டியுடன் நீா் அருந்திக் கொண்டிருந்த கரடி ஒன்று ராமையன் மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளது. இதில் தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகன் விஜயகுமாரையும் கரடி தாக்கியது. இவா்களின் அலறல் சப்தம் கேட்ட குடியிருப்புவாசிகள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனா். காயமடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதையடுத்து வனத் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டதுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் பாா்வையிட்டு, தேவையான சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தனா்.