Digital Awards 2025: `யூட்யூப் உலகின் முன்னோடி - விஜய் வரதராஜ்' - Digital Icon A...
பேட்டையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்தது: 10 மாணவா்கள் காயம்
பேட்டையில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்தனா்.
பேட்டை செக்கடி திருத்து பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(40). ஆட்டோ ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது ஆட்டோவில், பள்ளியிலிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றாா். இந்நிலையில் பேட்டை கருங்காடு சாலையில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாம்.
இதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனா். மாணவி சபிதா திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து கணேசனை தேடி வருகின்றனா்.