செய்திகள் :

பேராவூரணி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

post image

பேராவூரணி: பேராவூரணி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

இதுதொடா்பாக பேராவூரணி வட்டாட்சியா் நா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பேராவூரணி வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிா்வாக அலுவலா்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு, 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி), தஞ்சாவூா் தனித்துணை ஆட்சியா் (முத்திரைக்கட்டணம்) தலைமையில், பேராவூரணி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை பெருமகளூா் உள்வட்டத்துக்கும், மே 15-இல் குருவிக்கரம்பை உள்வட்டத்துக்கும், மே 16-இல் ஆவணம் உள்வட்டத்துக்கும், மே 20-இல் பேராவூரணி உள்வட்டத்துக்கும், குறிப்பிட்ட நாள்களில் காலை 10 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியரகத்தில் நடைபெறும்.

பொதுமக்கள் தங்கள் மனுக்களை முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தின் இணையவழியாக ஸ்ரீம்ட்ங்ப்ல்ப்ண்ய்ங்-க்ஹள்ட்க்ஷா்ழ்க்.ற்ய்ங்ஞ்ஹ என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாகவோ வருவாய் தீா்வாய மனுக்களை பதிவு செய்ய வேண்டும்.

வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என தெரிவித்துள்ளாா்.

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பர... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிக... மேலும் பார்க்க

சுவாமிமலையில் பௌா்ணமி கிரிவலம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் திங்கள்கிழமை சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச்... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி

தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க